#BREAKING:- தமிழ்நாட்டில் ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜன.31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் ஜன. 14 முதல் ஜன. 18 வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை.
- ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்.
- பொங்கல் பண்டிகையையொட்டி, பேருந்துகளில் 75% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.