1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கைது!

Q

கடலூர் மாவட்டம் மலை அடி குப்பம் அருகே தடையை மீறி முந்திரி கன்றுகள் நடும் நிகழ்விற்கு சென்ற சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆக்கிரமிப்பு நிலத்தில் நடப்பட்ட முந்திரி மரங்கள் 2 மாதங்கள் முன்னர் வெட்டப்பட்ட நிலையில் புதிதாக நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தடையை மீறி கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், மலைஅடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் வளர்க்கப்பட்ட முந்திரி மரங்கள் 2 மாதங்களுக்கு முன்னர் வெட்டப்பட்டன.

இதனை எதிரித்து முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டத்திற்கு போலீசார் தடைவித்தனர்.கிராமத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மலைஅடிகுப்பம் கிராமத்திற்கு தடையை மீறி முந்திரி கன்றுகள் நடும் விழாவிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கட்சி தொண்டர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like