#BREAKING : காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.