1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி..!

11

அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார் செந்தில் பாலாஜி. மேலும், கடந்த 2012 முதல் 2022 வரை சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரியும், 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் ஜூன் 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி.சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடிஅமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19ம் தேதி உத்தரவு

Trending News

Latest News

You May Like