#BREAKING : ஜானி மாஸ்டருக்கு நீதிமன்றம் ஜாமீன்..!

ஜானி மாஸ்டருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பெண் நடன இயக்குநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜானி மாஸ்டர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு வாரங்களாக சஞ்சல் குடா சிறையில் உள்ளார்.
இது குறித்து பெண் உதவி நடன இயக்குநர் நரசிங்கி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜானி மாஸ்டருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.