#BREAKING கொரோனாவின் கோர பிடியில் சென்னை.. 60 ஆயிரத்தை நெருக்கும் பாதிப்பு !

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் தான் அதன் தாக்கம் உச்சத்தில் உள்ளது.
சென்னையில் கடந்த 26 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நாள்தோறும் கொரோனா உறுதியானது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அந்த வகையில் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,327ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் தமிழக அளவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில் உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,201ஆக உயர்ந்துள்ளது.
newstm.in