#BREAKING தமிழகத்தில் 5,600க்கும் கீழ் இறங்கிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முன்பைவிட கொரோனா தொற்று சற்று குறைந்திருந்தாலும் நாள்தோறும் பாதிப்பு கணிசமாக பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு புதிகாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4,35,422 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டங்களை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 297 பேரும், கோவை மாவட்டத்தில் 394 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 312 பேரும், கடலூர் மாவட்டத்தில் 289 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.