#BREAKING சென்னையில் மேலும் 1,185 பேருக்கு கொரோனா.. 76 ஆயிரத்தை தாண்டிய மொத்த பாதிப்பு !

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1185 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,158-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 3,965பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,226ஆக உயர்ந்துள்ளது.
இதில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வந்த 58பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் மேலும் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 18 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 51 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,898ஆக உயர்ந்துள்ளது.