#BREAKING தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,300ஐ தாண்டியது!

தமிழகத்தில் ஒரே நாளில் 62 பேர் கொரோனா தொற்றால் பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,314ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு சீராக பதிவாகி வருகிறது. இன்று 62பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் 6 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.
சென்னையில் மட்டும் இதுவரை 3428 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 604 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 590 பேரும், கோவை மாவட்டத்தில் 497 பேரும், மதுரை மாவட்டத்தில் 398 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 349 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 1212 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை சீராக பதிவாகி வருகிறது.
newstm.in