#BREAKING தமிழகத்தில் 11 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு !
#BREAKING தமிழகத்தில் 11 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு !

தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் மேலும் 32 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 10,956 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதால் அச்சம் குறைந்துள்ளது. எனினும் 2ஆம் நிலை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 2,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,11,713 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 4,014 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,71,489-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 5 ஆயிரம், 6 ஆயிரம் என இருந்த கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்தது.
பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது. மாவட்டங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் கடந்த ஒருவாரமாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிகாரிகள், மருத்துவர்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். எனினும் அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் தொடங்கியுள்ளது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
newstm.in