1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானது : குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

1

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

  • எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்படும்.
  • மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்
  • நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  • குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
  • நீட் மற்றும் CUET தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். 
  • மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்., கட்சி அறிவித்துள்ளது.
  • மத்திய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.
  • மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
  • 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
  • இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
  • ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
  • ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
  • ராஜஸ்தான் மாநிலத்தைப் போல, குடிமக்கள் அனைவருக்கும் 25 லட்சம் ரூபாய் வரையிலான ரொக்கமில்லா மருத்துவக் காப்பீடு கொண்டுவரப்படும்
  • பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
  • நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
  • எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதாகவும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. .
  • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும் போன்றவை தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்திருந்தன.


 

Trending News

Latest News

You May Like