1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பிரபல காமெடி நடிகர் சேஷூ காலமானார்..!

1

தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு. இதனாலே இவரை ‘லொள்ளு சபா’ சேஷு என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து அவர் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த ஏ1 படத்தில் இவர் குடித்து விட்டு செய்யும் ரகளைகள் காமெடியாக மாறி இணையத்தில் பெரிய மீம் மெட்டீரியலாக மாறினார். இவர் கூறிய, “ஐயய்யயோ, அவரா...அவரு பெரிய ஆளாச்சேன்னு எல்லாரும் பயப்படுவாங்க..” என்ற டைலாக் இப்போது பலரால் ரீல்ஸ் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருடைய சிகிச்சைக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் செலவாகிறதாம். இதனால் சேஷுவின் உயிரை காப்பாற்ற பொதுமக்களும் ரசிகர்களும் ரூ 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவும்படி அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி காலமானார் நடிகர் சேஷூ.

Trending News

Latest News

You May Like