#BREAKING : சேலத்தில் கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து! இளைஞர் தற்கொலை முயற்சி!

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார்.
மோகன பிரியன் என்ற இளைஞர் கத்தியால் கையை அறுத்து தற்கொலை முயற்சி
படுகாயமடைந்த கல்லூரி மாணவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய மோகன பிரியன் என்ற இளைஞர் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
படுகாயமடைந்த கல்லூரி மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகி உள்ளனர். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.