#BREAKING : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பென்ஜால் புயலால் சேதமடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.