#BREAKING : செங்கோட்டையன் கோரிக்கை ஏற்கப்பட்டது - முதல்வர் ஸ்டாலின்..!

மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) என ஒன்று உள்ளது. இதில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும், தொகுதிகள் வாரியாக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.
எனவே இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று இந்த மாநில வளர்ச்சி குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொல் திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் மாநில வளர்ச்சி குழுவில் உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையனும் இதில் கலந்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிற்கு செல்லாமல் முதல்வர் தலைமையிலான குழுவுக்கு மட்டும் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் மாநில வளர்ச்சி குழுவில் நானும் உறுப்பினர். அந்த முறையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டும் நான் கலந்து கொண்டேன் என தெரிவித்திருந்தார்.இந்த குழுவில் எம்எல்ஏக்கள் எழிலன், நீலமேகம், பூமிநாதன் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், "கிராம சாலை திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. செங்கோட்டையன் வைத்த கோரிக்கையை ஏற்று, தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்தார்.
#WATCH | தேங்காய் விவசாயிகளுக்காக கோரிக்கை வைத்த செங்கோட்டையன்
— Sun News (@sunnewstamil) February 15, 2025
உடனடியாக நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#SunNews | #CMMKStalin | #Sengottaiyan | @mkstalin pic.twitter.com/khMnQiIgKB