1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : 6000 நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!

1

‘மிக்ஜாம்’ புயலால் பெய்த தொடர் மழையால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கடும் பாதிப்பிற்குள்ளானது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு.

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர்.

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ₹5,00,000 வழங்கப்படும்!
  • மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • சேதமடைந்த குடிசைகளுக்கு ₹8,000 வழங்கப்படும்
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹17,000 வழங்கப்படும்
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ₹22,500 வழங்கப்படும்
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹8,500 வழங்கப்படும்
  • எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹37,500 வழங்கப்படும்!  வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹4,000/- வழங்கப்படும்
  • முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) ₹50,000 வழங்கப்படும்
  • பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ₹15,000 வழங்கப்படும்.
  • முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ₹1,00,000 வழங்கப்படும்.
  • முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ₹7,50,000 வழங்கப்படும்!  சேதமடைந்த வலைகளுக்கு ₹15,000 வழங்கப்படும்.

Trending News

Latest News

You May Like