#BREAKING: இனி வீடு தேடி காய்கறிகள் வரும் - முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காய்கறிகள் , மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாமானியர்கள் மட்டுமின்றி, உணவகங்கள் நடத்தி வருவோரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தக்காளி, சின்ன வெங்காயம்,இஞ்சி, கேரட் ,பீன்ஸ் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல் எரிபொருள், காய்கறி, உணவு தானியங்கள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மேலும் ரேஷன் கடைகள், உழவர் சந்தைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கொரோனா காலத்தை போல வீடுதேடி காய்கறிகளை விற்பனை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.