#BREAKING : ராஜினாமா கடிதத்தை வழங்கிய முதல்வர்..!

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைபற்றியுள்ளது. 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களில்தான் வென்றது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 3 முறை முதல்வராக இருந்தவர். ஆனாலும் புதுடெல்லி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதேபோல அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி உள்ளிட்ட பலரும் படுதோல்வியை சந்தித்தனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் அதிஷி, துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவை சந்தித்து, இன்று (பிப்.9) தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பாஜகவின் புதிய முதல்வர் பதவி ஏற்கும் வரை, இவர் அரசு செயல்பாடுகளை கவனிப்பார் என கூறப்படுகிறது.