#BREAKING : வரும் 28, 29ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் ஆய்வு..!
தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9,10-ந்தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். அதன் பின் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்து முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு