1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. யார் இந்த ஆயி பூரணம் அம்மாள்..!

1

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலை பார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி மகள் ஜனனி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தைச் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5ஆம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.பலரும் இவரின் செயலை பாராட்டி வருகின்றனர்...

இந்நிலையில் , 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கொடையாக அளித்த மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like