#BREAKING : விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டுமனை பட்டாக்களை தமிழக முதல்வர் வழங்கினார். முதல்வரின் வருகை காரணமாக விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்பிலான அரங்குகள் அமைக்கப்பட்டது. நான் முதல்வன் திட்டம்; உரிமை தொகை திட்டம் குறித்தும் அரங்குகள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு அரங்கத்தையும் பார்வையிட்டு அது குறித்து முதல்வர் கேட்டறிந்தார். மொத்தமாக 417 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கினார். 40,148 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 16,852 பேருக்கு மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், வேளாண் கருவிகளையும் வழங்கினார்.
விழா மேடையில் பேசிய தமிழக முதல்வர், ''பெருந்தலைவர் காமராஜரை நமக்கு அளித்த மண் விருதுநகர். விருதுநகர் என்றதும் அனைவரும் எண்ணத்திலும் வருபவர் சங்கரலிங்கனார்.
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை அரசை ஏற்கும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் ₹41 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
காளிங்கபேரி, வெம்பக்கோட்டை அணைகள் மேம்படுத்தப்படும்.
அருப்புக்கோட்டையில் ₹350 கோடியில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படும்.
சிவகாசியில் ₹15 கோடி செலவில் நவீன கூட்டரங்கம் அமைக்கப்படும்.
விருதுநகரில் ₹25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
அருப்புக்கோட்டை அருகே புதிய சிப்காட் தொழிலகம் அமைக்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை 41 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்.
தமிழகத்திலேயே அதிகளவு உயர்கல்வி சேர்க்கை விருதுநகர் மாவட்டத்தில் தான் நடைபெறுகிறது.
அருப்புக்கோட்டை மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகாசி மாநகராட்சியில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மாநாட்டுக் கூட்ட அரங்கம் உருவாக்கப்படும்.
விருதுநகர் நகராட்சியில் 24 கோடி ரூபாய் 50 லட்சம் ரூபாய் செலவில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்'' என்றார்.