1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சென்னை மெட்ரோ பணிகள் பாலம் சரிந்து விபத்து - ஒருவர் பலி..!

1

 போரூர் முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ பணிகள் நடைபெறுகின்றன.இங்கு மேம்பாலம் மூலம் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பகுதியில் குறுக்கே வரும் அடையாறு ஆற்றிலும் ராட்ச தூண்கள் நிறுவி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இன்று இரவு எதிர்பாராத விதமாக இரண்டு ராட்சத மெட்ரோ தூண்களுக்கு நடுவே உள்ள பெரிய தண்டவாள டிராக் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் இடி பாடுகளுக்கிடையே சிக்கித் தவித்து வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

 

ராமாபுரம் எல் அண்ட் டி நிறுவனத்திற்கு முன்னாலே இந்த விபத்து நடந்துள்ளது. ஐந்து இரு சக்கர வாகனங்கள் மீது தண்டவாள டிராக் சரிந்து விழுந்துள்ள நிலையில் அந்த வாகனங்கள் யாருடையவை, சாலையில் சென்று கொண்டிருந்தவர்களின் வாகனங்களா, அல்ல்து அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களா என்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


 


 

Trending News

Latest News

You May Like