#BREAKING: இனி குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம்..!!
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி குடியிருப்புகள், வணிகத் தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 750 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமான பரப்பு, 8 வீடுகளுக்கும் அதிகம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், 300 சதுர மீட்டர் FSI-க்கு மேல் உள்ள வணிக கட்டிடங்களில் EV சார்ஜிங் வசதி கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.
8 வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர மீட்டருக்கு அதிகமான குடியிருப்புகளில் மின்சார சார்ஜ் வசதி கட்டாயம்
50 வீடுகளுக்கும் அதிகமான குடியிருப்புகள் இருந்தால் வெளியில் இருந்து வருவோருக்கும் இ-சார்ஜிங் வசதி கட்டாயம்
300 சதுரமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்களில் இ-சார்ஜிங் வசதி கட்டாயம்
விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு