#BREAKING : செல்போன் விலை குறைகிறது..! தங்கம் வெள்ளிக்கான சுங்கவரி 6 % ஆக குறைப்பு
- செல்போன் செல்போன் உதிரிபாகங்கள் வரி குறைக்கப்படும். செல்போன், செல்போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி 15 % ஆக குறைக்கப்படும்
- 3 வகை புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு.
- 25 தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு.விண்வெளி பாதுகாப்பு தொலைத்தொடருகளில் 25 முக்கிய தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு
- சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு
- தங்கம் வெள்ளிக்கான சுங்கவரி 6 % ஆகவும் பிளாட்டினத்திற்கு 6.4% ஆகவும் குறைப்பு.தங்கம் வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 %இல் இருந்து 6% ஆக குறைக்கப்படுகிறது
- மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி குறைப்பு
- பத்திரபதிவு கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிக பத்திரப்பதிவு நடக்கும் மாநிலங்களில் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- மேலும் பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யப்படும் போது முத்திரைத் தீர்வையை குறைக்க பரீசீலனை செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.