#BREAKING : சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது... எப்படி பார்ப்பது ?
சிபிஎஸ்இ கீழ் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார்2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வுகள் (பிப்ரவரி 15) தொடங்கி ஏப்ரல் 2-ம்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
.தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம். மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.