1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

1

தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறக்கும் பிரச்சாத்தில் வேட்பாளர்களும், அவர்களின் கட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 16ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஆனால் பாஜக வேட்பாளரான அண்ணாமலை, தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆவாரம்பாளையம் பகுதியில் திமுக தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் வரை காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அண்ணாமலை மாலை 4 மணிக்கு பிரச்சாரத்தை துவங்குவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு தான் துவங்கி உள்ளார். இதன் காரணமாக தான் இரவு 10.45 வரை அவர் பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. 

 

தமிழகத்தில் கடந்த முறை அதிமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக, இந்த முறை தனித்து களம் காண்கிறது. கோவையில் பாஜக அண்ணாமலையை எதிர்த்து அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவை தொகுதியில் தான் வரலாறு காணாத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளதாகவும், ஜூன் 04ம் தேதி தமிழகத்தில் பாஜக.,வின் ஓட்டு வங்கி அதிகரித்திருப்பதையும் அனைவரையும் காண முடியும் என்றும் அண்ணாமலை நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

இந்நிலையில் ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியைக் கடந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். இதனை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது.தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

Trending News

Latest News

You May Like