1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: 67 பேர் பலியான வழக்கு.. கன்னுக்குட்டிக்கு ஜாமீன்..!

Q

2024 ஜூன் மாதம் 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 69 பேர் மரணம் அடைந்தனர். பலர் கண்பார்வை பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்த வழக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, அவற்றை கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்டனர். சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், ஜாமீன் கோரி சென்னை உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கபட்டது. மனுதாரர்கள் தரப்பில், 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, வழக்கில் தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like