#BREAKING : சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று முன்தினம் பேசிய சீமான், பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள்.. நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.
நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு.. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை வீசுகிறேன்.. என்ன நடக்கிறது என பார்.... ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை.. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள்.. உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது.. Be Carefull.. சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்..
திராவிட குப்பைகளை உரமாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்க்க வந்த பிள்ளைகள் நாங்கள். பெரியார் ஆரிய அடிமை; ஆரிய கூட்டாளி மட்டுமல்ல. ஆங்கிலேய அடிமையனாகவும் வாழ்ந்திருக்கிறார். பெரியார் எந்த மதத்துக்கு எதிரான குறியீடு? என பேசியிருந்தார்.
சீமானின் இந்த பகிரங்க கொலை மிரட்டல் தொடர்பாக ஈரோடு போலீசில் கொளத்தூர் மணியை தலைவராக கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் நேற்று புகார் கொடுத்தனர். அதில், வன்முறையை தூண்டும் வகையிலும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய சீமானை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையின்போது வெடிகுண்டு வீசுவதாக சீமான் பேசியது குறித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை.
சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்..