#BREAKING : செங்கோட்டையில் கார் வெடித்து பயங்கர தீ விபத்து..!
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென வெடித்து எரிந்தது. இந்த திடீர் வெடிப்பால் அந்தப் பகுதி முழுவதும் கலவர சூழல் நிலவியது.
மெட்ரோ நிலையம் அருகே சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற காரில் திடீரென புகை எழுந்தது. சில நொடிகளில் பெரும் சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. வெடிப்பு ஏற்பட்டதும், மக்கள் அலறி ஓடி தப்பினர். அருகிலுள்ள வணிக வளாகங்களிலும் மெட்ரோ நிலையத்திலும் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால், பல வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பலர் காயம் அடைந்திருக்கலாம் எனவும், அவர்களை அருகிலுள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்தவுடன் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீ பரவுவதற்கு முன், அருகிலிருந்த வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. தீயணைப்பு வீரர்கள், “வெடிப்பின் தீவிரம் காரின் உள்ளே வெடிகுண்டு இருந்திருக்கலாம்” என்று ஆரம்ப சந்தேகம் தெரிவித்துள்ளனர்.