#BREAKING : கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது..!
தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் தொலைபேசி அழைப்பு வந்தது.
வருகிற மே 9ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது டெல்லியில் வழங்கப்படவுள்ளது. அதனால் 8ஆம் தேதி நானும், விஜய பிரபாகரனும் செல்கிறோம் என்றார்.
மே ஒன்பதாம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தகவல்#captainvijayakanth #premalathavijayakanth #centralgovt #padmaposhan #malaimurasu pic.twitter.com/iPGUQUMxIB
— Malaimurasu TV (@MalaimurasuTv) April 28, 2024