1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வாக்காளர்கள் நீக்கத்திற்கான காரணம் கூற முடியாது: ECI..!

Q

பீகார் மாநிலத்தில் மட்டும் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் என்ற தகவலும் வெளியானது. புலம்பெயர்ந்து வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் அந்த மாநிலங்களில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என SC-ல் ECI பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டியது கட்டாயமல்ல எனவும் நீக்கத்திற்கான காரணம் குறித்து கூறமுடியாது எனவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதாவது, சட்டம் மற்றும் வழிகாட்டுதல்களில், கணக்கெடுப்பின் போது படிவம் கிடைக்காதவர்களின் பட்டியலை தயாரிக்கவோ அல்லது பகிரவோ எந்த விதியும் இல்லை என தெரிவித்துள்ளது.

அதே சமயம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டனங்கள் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like