#BREAKING : ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பல பிராந்திய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் இந்த திட்டம் வகை செய்கிறது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.