#BREAKING : சென்னை VR மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னையில் கடந்த மாதம் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. உடனடியாக காவல்துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சென்று பள்ளி வளாகம், அறைகள் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த பள்ளி மாணவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். பின்னர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து இமெயில் ஐடி குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியில், சென்னை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வி.ஆர்.மாலில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வணிக வளாகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.