#BREAKING : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
கோவை மாநகரின் மத்திய பகுதியில் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.