#BREAKING : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மர்ம இமெயில் வந்துள்ளது. இதையடுத்து, விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.