#BREAKING : பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு பலத்த காயம்…!
நடிகர் ஷாருக்கானுக்கு 'கிங்' படத்தின் படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்குகிறார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.படப்பிடிப்பு பணிகள் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில். அதிரடி ஆக்ஷன் காட்சி இன்று படமாக்கப்பட்டது. அதில் ஷாருக் கான் ஈடுபட்டார் அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர்.
ஸ்டண்ட் செய்தபோது, ஷாருக்கானுக்கு தசை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கும்நிலையில், ஒருமாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, 'கிங்' படத்தின் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தப்படுவதாகவும், அக்டோபர் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.