#BREAKING : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு..!
மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரில் நேற்று விபத்துக்குள்ளானது
இந்த நிலையில், ஈரான் அதிபர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து இன்று (மே 20) தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா - ஈரான் இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்பு.ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு.
முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது