1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பா.ஜ.க மாநில நிர்வாகி போக்சோ வழக்கில் கைது..!

Q

பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரியில் தலைவராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவர் எம்.எஸ்.ஷா மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் 'தன்னுடைய மகளின் செல்போனுக்கு பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து என் மகளிடம் கேட்ட பொழுது சிறுமியின் தாயுடன் பாஜக பிரமுகர் முறையற்ற தொடர்பில் இருந்ததும், தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று உங்களுடைய கடனை அடைத்து விடுவதாக கூறி மனைவியோடு தகாத உறவில் இருந்ததும் தெரிந்தது. அதோடு என் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடைந்தையாக இருந்திருக்கிறார்' என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் பாஜக பிரமுகர் மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த பல மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவராக பதவி வகித்து வரும் எம்.எஸ்.ஷா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like