1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பாஜக வேட்பாளர் கரண் பூஷனின் கார் மோதி சிறுவர்கள் உயிரிழப்பு!

1

கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் 2009ஆம் ஆண்டில் இருந்து மூன்று முறை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தவர் பாஜகவை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலிலும் சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த போது, வீராங்கனைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சர்வதேச அளவில் பிரபல வீரர்களான சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் அடங்குவர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பல நாட்களாக பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

பின்னர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் பெரிதாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மல்யுத்த வீராங்கனைகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கொந்தளிப்பு அடங்கவில்லை. இந்த சூழலில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு சீட் மறுத்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. இவருக்கு சீட் கொடுத்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே முடிவை மாற்றினர்.ஆனால் அவரது மகனுக்கு சீட் கொடுத்துள்ளனர். கைசர்கஞ்ச் தொகுதியில் கரண் பூஷன் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில்  பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷன் சிங் கைசெர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று கோன்டா பகுதியில் கரன் பூஷனுக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மோதி 2 குழந்தைகள் பலியாகியுள்ளன. காயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 9 மணியளவில், தனது 17 வயது மகன் ரெஹான் மற்றும் 24 வயது மருமகன் ஷாஜாத் மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிரே வேகமாக வந்த எஸ்யூவி வந்துள்ளது. இரு சக்கர வாகனம் மீது மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதி கேட்டு அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர்.போலீசார் டிரைவரை கைது செய்து எஸ்யூவியை பறிமுதல் செய்தனர்.உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ராதிஷாம் ராய் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like