#BIG BREAKING : கூட்டணியை அறிவித்தார் ஓபிஎஸ்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/18fd730dc36d3688d18a0e843766faac.jpg?width=836&height=470&resizemode=4)
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பாக கழக ஒருங்கிணப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம்..சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரிடம் பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "3ஆவது முறையாக மோடியே பிரதமராக வருவார்; வாய்ப்பு தந்தால், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்” என்று மறைமுகமாக கூட்டணியையும் உறுதி செய்தார்.