#BREAKING : பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேருக்கு ஜாமீன்..!
பெங்களூவை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் மனைவியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர் அதுல் சுபாஷ். இவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினர். மேலும் மிரட்டி பணம் பறித்துள்ளனர். தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இவ்வாறு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அதுல் சுபாஷ் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் வைரல் செய்தியாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதுலின் சகோதரர் பிலாஸ் குமார் புகாரளித்தார். அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிகிதாவைத் தேடி பெங்களூரு காவல்துறையினர் அவர் வசிக்கும் உ.பி.யிலுள்ள ஜான்பூருக்கு விரைந்தனர். அங்கு அவரின் வீடு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள் குடும்பமாக முந்தைய நாள் இரவே வெளியே சென்றதாகக் கூறினர்.
தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் அவர்களைத் தேடிவந்த பெங்களூரு நிகிதாவை ஹரியானா மாவட்டத்தின் குருகிராம் நகரிலும், அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் அவரது சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோரை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரிலும் வைத்து (டிச. 14)கைது செய்தனர்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது மாமியார் நிஷா சிங்கானியா மற்றும் மைத்துனர் அனுராக் சிங்கானியா ஆகியோருக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
விசாரணையின் போது, நிகிதா தனது கணவருக்கு எதிரான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்தார், தானே துன்புறுத்தலுக்கு ஆளானதாக உறுதிப்படுத்தினார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், பிரிந்து இருக்கும் போது பணத்திற்காக அவரைத் துன்புறுத்துவதன் தர்க்கத்தை அவர் கேள்வி எழுப்பினா.