#BREAKING : புதுச்சேரியில் நாளை பந்த்..!
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டு அருகே விளையாடிய நிலையில் திடீரென்று மாயாமானர்.அக்கம் பக்கத்தில் குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 4 நாட்கள் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டையில் அவரது உடல் இருந்தது. சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியிருப்பது தெரியவந்தது.
குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்த போராட்டம் நடத்தினர். சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். சிறுமியை கொன்ற குற்றவாளிகளை கைது செய்த தூக்கிலிட வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தினர்
இந்நிலையில் எதிர்க்கட்சியான I.N.D.I.A கூட்டணி, நாளை புதுச்சேரியில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளன.