#BREAKING : ஏமன் கடல் பகுதியில் கப்பல் விபத்து : 68 பேர் உயிரிழப்பு..!
ஏமன் அருகே கப்பல் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 68 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டனர், மேலும் 74 பேர் இன்னும் காணவில்லை என்று ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. முழ்கிய படகில் 150 பேர் இருந்தனர் என்றும், 27 பேர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது
கடல் வழியாக சட்டவிரோதமாக யேமனுக்குள் நுழைய முயன்றபோது நீரில் மூழ்கி இறந்த எத்தியோப்பிய குடியேறிகளின் உடல்களை மீட்டெடுப்பதற்காக உள்ளூர் படைகள் ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அப்யான் பாதுகாப்பு இயக்குநரகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
கப்பல் விபத்தில் இருந்து 12 புலம்பெயர்ந்தோர் தப்பிப்பிழைத்ததாகவும் , கான்ஃபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய 54 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மற்றும் 14 பேர் வேறு இடத்தில் இறந்து கிடந்ததாகவும் அவர் கூறினார்.