#BREAKING : ஈராக் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் பலி, பலர் காயம்.
கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஐம்பது பேர் கொல்லப்பட்டதாக மாநில செய்தி நிறுவனம் (INA) வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் விசாரணையின் ஆரம்ப முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று ஆளுநர் கூறியதாக ஐஎன்ஏ தெரிவித்துள்ளது.
ஷாப்பிங் மால் முழுவதும் தீ பரவியதால், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் வெளியே ஓடினர். சிலர் உள்ளே சிக்கியுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த முழு விவரங்கள் இன்னும் தெரியவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.