#BREAKING : உதவி பேராசிரியர் தேர்வு திடீர் ஒத்திவைப்பு..!
அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகள் போன்றுஅரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை அறிவித்தது.
உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உளவியல், சமூகவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 4 ஆயிரம் காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்.29-ம் தேதி முடிந்தது . போட்டித்தேர்வு ஆக.4-ம் தேதி நடைபெற உள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டமும்அதோடு ஸ்லெட் அல்லது நெட்தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பி.எச்டி. முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.