1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

1

கடந்த 5 நாட்களாக சட்டப்பேரவை நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான 21ம் தேதி மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதனை கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் துறை சார்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலுரை கொடுத்தனர். இந்த நிலையில் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (24-01-2026) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து மக்கள் நலத்திட்டங்களை அறிக்கைகளாக அறிவித்தார்.

புதிய அறிவிப்புகள்:

1. கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடி செலவில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.

2. அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.2,000 இலிருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

3. ரூ.1,088 கோடி செலவில் கிராமப்புறங்களில் 2,800 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.

4. பணி ஓய்வின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

5. பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி காலத்தைப் பொறுத்து சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

6. முதியவர்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

7. சிறப்பு ஓய்வூதியம் வாங்கி வரும் பணியாளர்கள் உயிரிழந்தால், இறுதிச் சடங்குக்கு ரூ.20,000 வழங்கப்படும்.

Trending News

Latest News

You May Like