1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சீமான் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது..!

Q

பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், இன்று பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர். முன்னதாக இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சூழலில் சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட உள்ள நிலையில், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியாரிய இயக்கங்கள், மே 17 இயக்கத்தினர் உள்ளிட்ட பலர் சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்காக திருவான்மியூர் முதல் நீலாங்கரை வரை வரிசைகட்டி நின்றனர். அவர்கள் சீமான் வீட்டை நோக்கி முன்னேற முயற்சித்தபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like