1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!

1

இன்று ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அவரது நினைவிடம் சென்னைக்கு அருகில் உள்ள பொத்தூரில் அமைந்துள்ளது. அங்கு அவருக்கு முழு உருவ சிலை வைக்க அனுமதி கோரப்பட்டது. முதலில் காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு, "சிலை வைக்க அனுமதி அளிக்கிறோம்" என்று கோர்ட்டில் தெரிவித்தது.

இந்த கொலை நடந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி இன்று நடந்தது. இது வள்ளலார் நினைவிடத்தில் தொடங்கி ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்டிராங் சிலையை அவரது மகள் திறந்து வைத்தார். ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சிக்கும், ஆம்ஸ்டிராங் மனைவி பொற்கொடிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்தது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிப் பொறுப்பில் இருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கப்பட்டார். கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிக்கை வெளியிட்டார். பொற்கொடி குடும்பத்தையும், குழந்தையையும் கவனிப்பார். மேலும், முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார். இனி அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராஜாராம் தெரிவித்தார். அவரது குடும்பத்துக்கு கட்சி துணை நிற்கும்" என்று அவர் கூறினார்.

இதற்கு பொற்கொடி மறுப்பு தெரிவித்தார். தன்னை நீக்க மாநிலத் தலைவரான ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என்றார். மேலும், இது தொடர்பாக அவதூறு பரப்பிய மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர், ஆனந்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயருடன் புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி. அதன் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கட்சியின் சின்னத்தில் யானையில் பேனா வைத்திருப்பது போல் உள்ளது.

Trending News

Latest News

You May Like