#BREAKING : ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது!செப். 2 வரை சிறை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு தொடா்பு இருப்பதாக போலீசாருக்கு தொியவந்தது.இந்த வழக்கில் 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தியுடம் வருகின்றனா்.
உடனே அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனா். இதற்கிடையே ஆந்திராவில் உள்ள உறவினா் வீட்டில் பதுங்கி இருந்த பொற்கொடியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனா். பின்னா் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா். அவாிடம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொற்கொடியின் பங்கு என்ன என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொற்கொடி கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை பொற்கொடியையும் சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 25 பேர் ஆகும். அந்த 25 பேரில் ஒருவரான திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.