1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஏ.ஆர். ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் விவாகரத்து அறிவிப்பு..!

Q

ஏ.ஆர். ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் மோகினி டே தன் விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார்.

 

மோகினியும், அவரின் கணவர் மார்க் ஹார்ட்சச்சும் கூட்டாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

 

நானும், மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இருவரும் பேசி மனமொத்து இந்த முடிவை எடுத்தோம். எங்களுக்கு வாழ்க்கையில் வெவ்வேறு விஷயம் பிடித்திருக்கிறது. அதனால் மனமொத்து பிரிந்துவிடுவது தான் சரி என்கிற முடிவுக்கு வந்தோம்.

இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். MaMoGi, மோகினி டே குரூப்ஸ் உள்ளிட்ட பல ப்ராஜெக்டுகளில் சேர்ந்தே வேலை செய்வோம். நாங்கள் நன்றாக சேர்ந்து வேலை செய்வதில் எப்பொழுதுமே பெருமை கொண்டிருக்கிறோம். அது தற்போதைக்கு நிற்காது.

உங்களின் ஆதரவுக்கு நன்றி. நாங்கள் எடுத்த முடிவை தயவு செய்து கவுரவித்து இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாக இருக்கவும். எங்களின் பிரைவசியை மதிக்கவும். எந்த கணிப்பும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக தன் வழக்கிறஞர் வந்தனா ஷா மூலம் சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்ட சில மணிநேரத்தில் கிட்டார் கலைஞரான மோகினி டே தன் விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Q

Trending News

Latest News

You May Like